கைது வாரண்ட் எதிரொலி: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

கைது வாரண்ட் எதிரொலி: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!
கைது வாரண்ட் எதிரொலி: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலையில் நடிகர் விஷால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் 

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை அவர் முறையாக வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது 

இந்த குற்றச்சாட்டு குறித்து விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் அவர் மீது வருமான வரித்துறையினர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் விஷால் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு எதிராக கைது வாரண்ட்  பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிட்டதால் குறுக்கிட்ட நீதிபதி, அவரை தமிழில் வாதிடுமாறு கூறினார்.