கவினை கலாய்த்து வில்லுப்பாட்டு பாடும் சாண்டி குழுவினர்

 கவினை கலாய்த்து வில்லுப்பாட்டு பாடும் சாண்டி குழுவினர்
 கவினை கலாய்த்து வில்லுப்பாட்டு பாடும் சாண்டி குழுவினர்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் தமிழக நாட்டுப்புற கலைகள் குறித்த டாஸ்க்குகளும், அந்த கலைகளின் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை தெரிவித்து வருவதிலும் ஹவுஸ்மேட்ஸ்கள் உள்ளனர்.

எனவே வனிதா வீட்டிற்குள் இருந்தும் இந்த வாரம் எந்த சண்டையும் வரவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.


இருப்பினும் கிடைக்கும் கேப்பில் கவின் காதலை கேலி செய்யும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இன்றைய வில்லுப்பாட்டு டாஸ்க்கில் சாண்டி, முகின், லாஸ்லியா, வனிதா ஆகியோர் வில்லுப்பாட்டு ஒன்றை பாடி அசத்துகின்றனர்.

இந்த வில்லுப்பாட்டிலும் கவின் காதல் குறித்து பாடப்படுகிறது. சாண்டி வில்லுப்பட்டு பாட, அதற்கு முகின், லாஸ்லியா, வனிதா ஆகியோர் கோரஸ் செய்ய ஒரே கலகலப்பாக உள்ளது.


கவின் மட்டுமே காதல் செய்வார் என்று முகின் அழுத்தி அழுத்தி கூற கவினும் லாஸ்லியாவும் வெட்கத்தில் சிரிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே புரமோ முழுவதிலும் கவின், லாஸ்லியா காதல் காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் அது தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.