செப்டம்பர் முழுவதும் செம அப்டேட்: 'பிகில்' குறித்து அர்ச்சனா கல்பாதி

செப்டம்பர் முழுவதும் செம அப்டேட்: 'பிகில்' குறித்து அர்ச்சனா கல்பாதி
செப்டம்பர் முழுவதும் செம அப்டேட்: 'பிகில்' குறித்து அர்ச்சனா கல்பாதி

செப்டம்பர் முழுவதும் செம அப்டேட்: 'பிகில்' குறித்து அர்ச்சனா கல்பாதி
தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தாலும் நேற்று அதனை நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு 'பிகில்' ரசிகர்கள் தயாராகுங்கள் என்று அவர் தெரிவித்ததை அடுத்து பிகில் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் விஜய் ரசிகர்கள் பலரும் 'பிகில் படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 'பிகில் படத்தின் அடுத்த அப்டேட் 'வெறித்தனம்' விரைவில் வெளிவரும் என்றும், அதுமட்டுமின்றி செப்டம்பர் மாதம் முழுவதும் 'பிகில்' படத்தின் அப்டேட்கள் தினமும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் செப்டம்பர் மாதம் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் படம் தீபாவளி அன்று 'பிகில் வெளிவருவது மட்டுமின்றி அதிக திரையரங்குகளில் வெளிவரும் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை ஏற்படுத்த இருப்பதாகவும் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கடு. ஏற்கனவே தீபாவளி தினத்தில் விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக திரையரங்குகளில் 'பிகில் வெளிவரும் என்று அர்ச்சனா கூறினார்.