தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' மீண்டும் தள்ளி வைப்பா?
தனுஷ் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் நீண்ட தாமதமாகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது
இந்த நிலையில் இந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை வெளியாக வாய்ப்பு இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தெரிகிறது.
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' பாடல் ஹிட்டாகியுள்ளது.