புதிய சாதனைப் படைத்த விஜய்யின் வெறித்தனம் பாடல்
இயக்குநர் அட்லீ இயக்கி வரும், ’பிகில்’ திரைப்படம் இந்தாண்டின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது. நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, யோகிபாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைத்து வருகிறார்கள் ’பிகில்’ படக்குழுவினர்.
’பிகில்’ படத்தின் முதல் சிங்கிளான ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், விஜய் பாடியிருக்கும் இரண்டாவது சிங்கிளான ’வெறித்தனம்’ பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதாவது யூ ட்யூபில் 1 மில்லியன் லைக்குகளைப் பெற்ற முதல் லிரிக் வீடியோ என்ற சாதனையை ‘வெறித்தனம்’ பாடல் படைத்துள்ளது.
இந்தப் லிரிக் வீடியோ வெளியான இரண்டு நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளையும், 64 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. லிரிக் வீடியோவே இவ்வளவு சாதனை படைத்திருக்கும் போது, ‘வெறித்தனம்’ பாடலின் வீடியோ இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.