பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்
சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி விஸ்வாசம் படப் பாடலான கண்ணான கண்ணே பாடலைப் பாடிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.அது பற்றி அறிந்த அப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான், அந்த இளைஞருக்கு தன் படத்தில் பாடும் வாய்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தார். அதை இப்போது செய்தும் காட்டியிருக்கிறார்.
ரத்தின சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் சீறு என்ற படத்தில் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியைப் பாட வைத்திருக்கிறார். அந்தப் பாடலை பெண் கவிஞர் பார்வதி எழுதியிருக்கிறார்.பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இமான் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு அதைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.சொன்னபடி அந்த இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய இமானை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.