‘விஸ்வாசம்’ வசூல் சாதனை முறியடித்த ‘பிகில்’!

‘விஸ்வாசம்’ வசூல் சாதனை முறியடித்த ‘பிகில்’!

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார். சுமார் 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தார். விஜய் உடன் நயன்தாரா, யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், விஜயன், கதிர் உள்பட பலர் நடித்து இருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். பிகில் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை புறந்தள்ளிய மக்கள், பெரிய அளவில் சென்று பார்த்தனர். இதன் விளைவாக. பிகில் வசூல் ரீதியாக உலக அளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

உலக அளவில் 3 நாட்களில் மொத்த வசூலில் 100 கோடியைத் தாண்டியது ‘பிகில்’. தமிழகத்தில் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வசூல் கிடைத்துளளதாக சொல்கிறார்கள்.. அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் டாலர்களைக் ‘பிகில்’ வசூல் சாதனை படைத்தது.

‘பிகில்’ படத்தின் உலகளாவிய வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளதாம். இதன் மூலம் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலான ரூ.181 கோடியைத் தாண்டியிருக்கிறது ‘பிகில்’. இன்னும் சில நாட்களில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் வசூலையும் முறியடித்துவிடும் என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

தமிழக வசூலில் ரூ.90 கோடியைத் தாண்டியுள்ளது ‘பிகில்’. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தும் என சொல்கிறார்கள். ஆனால், ‘பிகில்’ படத்தின் தமிழக உரிமையை 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

வரித்தொகை, பங்குத் தொகை எனக் கழித்தது போக கைக்கு 83 கோடி ரூபாய் வர வேண்டும் என்றால் தமிழகத்தில் 140 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ய வேண்டும் என்கிறார்கள்.