'வர்மா' படத்தையும் திரையிட திட்டமா? கோலிவுட்டில் பரபரப்பு

 'வர்மா' படத்தையும் திரையிட திட்டமா? கோலிவுட்டில் பரபரப்பு
 'வர்மா' படத்தையும் திரையிட திட்டமா? கோலிவுட்டில் பரபரப்பு

நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்ததுமே அவர் பாலாவின் இயக்கத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்று விரும்பினார்.

இதனை அடுத்து அர்ஜுன்ரெட்டி படத்தின் ரீமேக்கை உருவாக்கும் பொறுப்பை பாலாவிடம் ஒப்படைத்தார். இந்த படமும் 'வர்மா' என்ற பெயரில் தயாரானது. ஆனால் இந்தப்படம் அப்படியே ஒரிஜினல் படத்தின் ரீமேக்காக இல்லாமல் தன்னுடைய பாணியில் பாலா உருவாக்கியதால் அதிருப்தி அடைந்த விக்ரம், அந்த படத்தை வெளியிடாமல் மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்ற படத்தை கிரிசய்யா என்ற இயக்குனரை வைத்து உருவாக்கி அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

'ஆதித்ய வர்மா' படத்தில் துருவ் விக்ரம் மிக அருமையாக நடித்திருக்கிறார் என பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், 'வர்மா' படத்தில் பாலா கொடுத்த பயிற்சிதான் இந்த படத்தில் துருவ்வை நன்றாக நடிக்க வைத்து உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் 'வர்மா' படத்தை பார்த்த ஒரு சிலர், இந்த படம் 'ஆதித்ய வர்மா' படத்தைவிட நன்றாக இருப்பதாகவும் இந்த படத்தையும் ரிலீஸ் செய்தால் இரண்டில் எது நல்ல படம் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் கருத்து கூறி வருகின்றனர்

எனவே 'ஆதித்ய வர்மா' திரைப்படம் அனைத்து திரை அரங்குகளில் இருந்து தூக்கிய பின்னர் வர்மாவை திரையிட விக்ரம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரே படத்தை ஒரே கதையை இரண்டு இயக்குனர்கள் வெவ்வேறு விதமாக இயக்கி, அந்த இரண்டு படத்தையும் ரிலீஸ் செய்வது என்பது கோலிவுட் வட்டாரத்தில் புதுமையான ஒன்று என்பதால் 'வர்மா' படத்தின் ரிலீசை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்