வெறித்தனம் – 'பிகில்' தேசிய அளவில் புதிய சாதனை
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த அக்டோபர் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் கதிர், விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா என்று ஏராளமானோர் நடித்திருந்தனர்.
முதல் முதலாக வெளியிடப்பட்ட இந்த படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த சமையத்தில் விஜய் ரசிகர்கள் பிகில் ஹேஷ்டேகை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் இன்று டிவிட்டர் இந்தியா தன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்திய அளவில் அதிகபடியாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிகில் ஹேஷ் டேக் தேசிய அளவில் 6வது இடத்தை பெற்றுள்ளது.
தமிழ் திரைப்படம் சார்ந்த ஒரு ஹேஷ்டேக் தேசிய அளவில் 6வது இடத்தை பிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.