வடிவேலு டயலாக்கை டைட்டிலாக கொண்டு உருவாகும் படத்தில் கோபி - சுதாகர்
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை கோபி மற்றும் சுதாகர் இணை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இவர்கள் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக ஒரு படத்தை தயாரிக்கவிருக்கின்றனர்.
இந்த படத்தில் கோபி மற்றும் சுதாகர் இருவரும் முதன்மை வேடத்தில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தை புதுமுக இயக்குநர் எஸ்ஏகே இந்த படத்தை இயக்கிவிருக்கிறார். இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, நிஜாய் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இந்த படத்துக்கு ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோ யா (Hey Money Come Today Go Tomorrow Ya) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வசனம் 'மனதை திருடி விட்டாய்' படத்தில் நடிகர் வடிவேலு பேசி மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.