ரஜினிகாந்த்துக்கு வில்லனாகும் அக்ஷய் குமாரின் நண்பர்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பிரமாண்டமான திரைப்படம் ‘தர்பார்’, லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைபடத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
முற்றிலும் அதிரடி திரைப்படமாக உருவாகிவரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது, அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படத்தில் வில்லனாக பிரபல இந்தி ஆக்ஷன் நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ஷாம் நடித்த ‘12பி’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து குறிப்பிடத்தக்கது.
சுனில் ஷெட்டி, நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பராவார்.