ஜெய் நடிப்பில் எஸ்.ஏ .சந்திர சேகரன் இயக்கும் “கேப்மாரி”
தமிழ், தெலுங்கு, இந்தி , என அனைத்து மொழிகளிலும் வெற்றி படங்களை இயக்கியவர் எஸ் .ஏ .சந்திர சேகரன். தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், ரகுமான் என பல முன்னணி நடிகர்களை இயக்கியதோடு விஜயகாந்த், விஜய், விஜய் ஆண்டனி, சிம்ரன், போன்ற பலரையும் திரையுலகில் பிரபலப்படுத்தியவர்.
இவர் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி”. இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். "கேப்மாரி " ஜெய் நடிக்கும் 25-வது படமாகும். இவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி நடிக்க சத்யன் ,தேவதர்ஷினி, பவர் ஸ்டார், லிவிங்ஸ்டன், சித்தார்த் விபின் (இசை அமைப்பாளர் )நடிக்கிறார்கள் .
காதலும், கவர்ச்சியும், காமெடியும் நிறைந்த இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது .
“கிரீன் சிக்னல்” தயாரிக்கும் “கேப் மாரி” படத்திற்கு இசை :சித்தார்த் விபின் , ஒளிப்பதிவு :ஜீவன், கலை: வீரமணி எடிட்டிங்: ஜி.வி.பிரசன்னா.
கதை- திரைக்கதை -வசனம் -இயக்கம் - தயாரிப்பு : எஸ்.ஏ.சந்திர சேகரன்.