ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய்….!!!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய்….!!!
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ஜெய்….!!!

தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெய். இந்நிலையில் பஞ்சாபியைச் சேர்ந்த நடிகை பிரக்யா நக்ரா நடிகர் ஜெய் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்க இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதே புகைப்படத்தை நடிகர் ஜெய்யும் வெளியிட்டுள்ளார்.


இதனால் ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகி விட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் நடிகை பிரக்யா மற்றும் நடிகர் ஜெய் இருவரும் பேபி அண்ட் பேபி என்ற படத்தில் நடித்து  வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷனுகாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கேமரா இருப்பது நன்றாக தெரிய வருவதால் இது எல்லாம் பழைய ஐடியா என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்