தனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்

தனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்

கொரோனா ஊரடங்கில் நடிகர் நடிகைகள் பலரும் தங்கள் வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் சினிமா அனுபவங்களை சமூக வலைத்தள நேரலையில் பேசி வருகிறார்கள். நடிகை சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டி வருமாறு

“எந்த விஷயமும் நமது கட்டுபாட்டில் இருக்காது. நமக்குள் இருக்கிற திறமையை தெரிந்து கொள்வது முக்கியம். எனது அழகின் ரகசியம் என்ன என்று கேட்கிறார்கள். அது உடற்பயிற்சியில் இருக்கிறது. தினமும் தண்ணீர் அதிகம் குடிப்பேன். மேலும் அழகு எனது பெற்றோர்களிடம் இருந்து வந்தது. எனது தேகத்தில் ஐந்து இடங்களில் பச்சை குத்தி இருக்கிறேன். கழுத்தில் குத்தி உள்ள பச்சையில் இசை அடையாளம் இருக்கும். முதுகில் பெயரை பச்சை குத்தி உள்ளேன். மணிக்கட்டின் மேல் ரோஜா பூ இருக்கும். இடுப்புக்கு கீழே ஒரு டிசைன். கால் பாதத்தின் மீது இன்னொரு பச்சை குத்தி இருக்கிறேன். எனக்கு எதுவும் வரவில்லை. சிறிய வயதில் நான் செய்த ஜாலியான திருட்டு என்றால் சாக்லெட் பாக்கெட் திருடியது. ஆனால் நான் திருடியதை எனது தந்தை கண்டுபிடித்து விட்டார். கடைக்காரருக்கு அந்த சாக்லெட் பாக்கெட்டை திருப்பி கொடுத்து விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அன்று முதல் இந்த மாதிரி வேலையை எப்போதும் செய்யக் கூடாது என்று முடிவு செய்தென். எனது மன நிலையை மாற்றிய சம்பவம் அது.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.