கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `அம்மன்’ நெடுந்தொடர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `அம்மன்’ நெடுந்தொடர்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `அம்மன்’ நெடுந்தொடர்

கடவுளின் அருள் இருந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் சக்தி வாய்ந்த பெண் தெய்வமான அம்மனின் அருளை தெய்வபக்தி மிக்க ‘சக்தி’ கதாப்பாத்திரம் மூலம் காட்சிப்படுத்துகிறது `அம்மன்’ நெடுந்தொடர்.

தாய் தந்தையற்ற இளம்பெண்ணான சக்தி தன் சகோதரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறாள்.சொத்துக்காக சக்தியை கூண்டுக்கிளியாக வைத்திருக்கும் அவள் சகோதரி சாரதா ஒருபுறம் சக்தியை தன் ஆளுமையால் அடக்கி வைக்க, இன்னொருபுறம் ,சக்தி அருள்வாக்கு சொன்னாலே நல்லது நடக்கும் என நம்புகிறார்கள் ஊர்மக்கள். அம்மனின் மீது தீராத பக்தி கொண்ட சக்தி தன் ஆழ்ந்த பிராத்தனையின் மூலம் கூறும் அருள்வாக்கால் அந்த ஊர்மக்களுக்கு தொடர்ந்து நல்லதே நடக்கிறது. அந்த ஊரில் அம்மனின் அருளால் கண்கூடாக சில ஆச்சரியங்கள் நடக்கின்றன.

தெய்வத்தின் அருள் கொண்ட, ஊரே கடவுளாக நினைக்கும் பெண்ணான சக்திக்கும் , கடவுள் நம்பிக்கையே இல்லாத மருத்துவரான ஈஸ்வருக்கும் நடுவில் காதல் உருவாகுமா? என்னதான் ஊரே தன்னை தெய்வ அருள்கொண்ட பெண்ணாக நினைத்தாலும் தானும் ஒரு சராசரி பெண்தான் என்கிற உள்மனத்தவிப்புகளுடன் இருக்கும் சக்தி, அம்மன் அருளால் தன் சூழல்களை எவ்வாறு சரி செய்யப் போகிறாள்?  அவளால் கிராம மக்கள் எவ்வாறு அம்மன் அருளைப் பெறப் போகிறார்கள் என்பதே கதை.

தெய்வ வழிப்பாட்டை முற்றிலும் வேறுப்பட்ட கதையின் மூலம் சொல்லும் இக்கதை குடும்பம் மற்றும் ஊர்மக்கள் என இருவேறு களத்தையும் அழுத்தமாகவும் மக்களின் நம்பிக்கை குறையாத வகையிலும் வழங்கவுள்ளது.

சக்தியாக புதுமுக நடிகை பவித்ராவும் , ஈஸ்வராக  அமல்ஜித்தும் நடிக்கிறார்கள். நடனக் கலைஞர் ஜெனிஃபர் சக்தியின் சகோதரியாக சாரதாவாக நடிக்கிறார். இத்தொடரை ரவிப்ரியன் இயக்குகிறார். வாமனன்,என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அகமதுவின் மிராக்கி நிறுவனம் இத்தொடரைத் தயாரிக்கிறது.

தைத்திங்கள் சிறப்பு நிகழ்ச்சியாக அம்மனின் அருளை  தரிசிக்க , வரும் ஜனவரி 27 முதல் திங்கள் முதல் சனி இரவு 7:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் `அம்மன்’ தொடரைத் தவறாமல் காணுங்கள்.