டகால்டி திரை விமர்சனம்

டகால்டி திரை விமர்சனம்

நடிகர்கள்:சந்தானம்,யோகி பாபு,ராதா ரவி
இயக்கம்:விஜய் ஆனந்த்

மும்பையை சேர்ந்த பெரும் பணக்காரர் விஜய் சாம்ராட் (தருண் அரோரா)ஒரு பெண்ணின் ஓவியத்தை தனது அடியாட்களிடம் கொடுத்து அவரை கண்டுபிடிக்கச் சொல்கிறார். அந்த பெண்ணை கண்டுபிடிக்க ரூ. 10 கோடி வரை செலவு செய்ய விஜய் சாம்ராட் தயாராக உள்ளார். பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையை உள்ளூர் ரவுடியான பாய்(ராதாரவி) ஃபிராடு குருவிடம் (சந்தானம்) கொடுக்கிறார்.

சந்தானம் அந்த பெண்ணை தேடி மும்பையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்கிறார். ஓவியத்தில் இருக்கும் பெண் மல்லி(ரித்திகா சென்) என்பதை சந்தானம் கண்டுபிடிக்கிறார். அப்பாவியான ரித்திகா சென்னுக்கு பெரிய இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதையடுத்து சந்தானம் பாலிவுட் பத்தில் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி ரித்திகா சென்னை வில்லன் தருணிடம் ஒப்படைக்கிறார்.

அதன் பிறகு சந்தானம் தன் தவறை உணர்ந்து ரித்திகாவை காப்பாற்ற தன்நண்பன் உதவியுடன் தருணின் வீட்டிற்கு செல்கிறார். இது தான் கதை