தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்:- மறைந்த இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன்

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்:- மறைந்த இயக்குனர் மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன்

அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களுக்கு,

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அப்பா இனி இல்லை, என்ற வாக்கியம் இன்னும் நம்ப முடியாத வார்த்தைகளாக தான் தெரிகிறது.

எல்லாமே ஒரு கண்ணை தொறந்து கொண்டு காணும் கெட்ட கனவாகத்தான் அரங்கேறியது. ஏப்ரல் ரெண்டாம் தேதி அதிகாலை ஆறே கால் மணிக்கு அப்பா தன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நான் தொடர்பு கொண்ட ஒரே நபர், அப்பாவிற்கு மிகவும் பிரியமான நபர் நிக்கிலுக்கு. 

மருத்துவ காரணங்களுக்காக அப்பாவின் அடக்கம் நறு மாலை நான்கு மணிக்கு நடந்தேற வேண்டிய செய்தியை சகோதரன் நிக்கிலிடம் கூறினேன்.

அடுத்த நிமிடம், எங்கள் வீட்டின் முன் பத்திரிகை நண்பர்கள் வந்திறங்கினார். எங்கள் குடும்பத்தின் மன நிலையை புரிந்து கொண்டு , அனைவரும் மிக அமைதியாக தங்கள் கடமையை செய்தனர்.

அப்பாவின் கடைசி நிமிடங்களை பார்க்க முடியாமல் போன பல பேருக்கு, மீடியா நண்பர்கள் தங்கள் திறமையால் உலகம் முழுக்க கொண்டு சென்றனர்.

அந்த வெய்யிலும் வந்திறங்கி, குடிக்க தண்ணீர் கொடுக்க முடியாத சூழலில் , அப்பாவின் அடக்கம் வரை வந்து நின்ற பத்திரிகை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.

பல விதமான ஊடகங்களில் அப்பாவின் கடைசி யாத்திரையை பார்த்து இந்த வினாடி வரை எங்கள் தொலை பேசி அடித்து கொண்டே இருக்கிறது. 

ஒரு பத்திரிகையாளராக தன் வாழ்க்கையை தொடங்கி திரைப்படத்துறையில் பல உச்சங்களை தொட்ட எங்கள் தந்தைக்கு பத்திரிகை நண்பர்கள் செய்த மரியாதை அபாரம்.

மீண்டும், என்றும் என் சகோதரர் நிக்கிலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் 

ஜான் மகேந்திரன்.