‘ஜிப்ஸி’திரை விமர்சனம்

‘ஜிப்ஸி’திரை விமர்சனம்

நடிகர்கள்:ஜீவா,நடாஷா சிங்
இயக்கம்:ராஜுமுருகன்

ஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார்.அவரும் இறக்கவே ஜிப்ஸி குதிரையை வைத்து வேடிக்கை காட்டி பிழைப்பு நடத்துகிறார். ஊர், ஊராக சுற்றும் ஜிப்ஸி நாகூருக்கு வரும்போது வஹீதா(நடாஷா சிங்) மீது காதல் ஏற்படுகிறது.இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த வஹீதாவுக்கு ஜிப்ஸி மீது காதல் வர இருவரும் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.

வஹீதா கர்ப்பிணியாக இருக்கும்போது ஏற்படும் மதக் கலவரத்தால் கணவனும், மனைவியும் ஆளுக்கொரு திசையாக பிரிகிறார்கள். அதன் பிறகு சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை.

கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன். கலவரக் காட்சிகளை கருப்பு, வெள்ளையில் காட்சி நம்மை கலவர இடத்துக்கே கூட்டி செல்கிறது. 

இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது. ‘ஜிப்ஸி’ கதை