’இடி மின்னல் காதல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’இடி மின்னல் காதல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’இடி மின்னல் காதல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’இடி மின்னல் காதல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

வேலை தேடும் சிபியும், வசதியான வீட்டு பெண்ணான பவ்யா திரிகாவும் காதலர்கள். சிபி வேலைக்காக வெளிநாடு செல்ல முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபடுகிறார். 

 

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் காரில் பயணிக்கும்போது அவர்கள் கார் ஒருவர் மீது மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார். இதனால் சிபி அதிர்ச்சியில் உறைகிறார். 

 

காவல் துறையிடம் பொய்யான தகவல் கொடுத்து தற்காலிகமாக பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் காதலர்கள். இதற்கிடையே கார் மோதி இறந்ததவரின் மகன் மனநல பிரச்சினையினால் பாதிக்கபப்டுகிறான். அவனுக்கு விலை மாதுவாக வரும் பக்கத்தை வீட்டை சேர்ந்த யாஸ்மின் பொன்னப்பா அடைக்கலம் தருகிறார்.

 

தன் அப்பாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறான் சிறுவன். காவல்துறை விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டுபிடித்ததா? நாயகன் வெளிநாடு சென்றாரா? தந்தையை இழந்த சிறுவனின் முடிவு என்ன/ என்பது மீதிக்கதை.

 

நாயகனா நடிச்ச சிபிக்கு ஆக்‌ஷன் நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் இருக்குது. ஆனால், கிளைமாக்ஸில் ஆக்‌ஷன் காட்சியில் அவரை அடி வாங்க வச்சிருப்பது ஏத்துக்கொள்ள முடியாததா இருக்குது.

 

நாயகியாக நடிச்ச பவ்யா திரிகா, அளவான நடிப்பு பிளஸ் அழகோடு நடிச்சி ரசிகர்களை கவர்ந்திடறாங்க. மொத்தத்தில் அவங்க கேரகடர் திரைக்கதையில் பலம் சேர்க்கிற அளவுக்கு இருக்குது.

 

வில்லனா நடிச்ச வின்செண்ட் நகுல் ஆரம்பத்தில் ஓவர் பில்டப்புடன் அறிமுகமானாலும் அதுக்கப்புறம் வரும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அவ்வளவா பொருந்தவில்லை.

 

சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காம மன ரீதியா பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகளில் தத்ரூபமா நடிச்சிருக்கார்.

 

பாலியல் தொழிலாளியா நடிச்ச யாஷ்மின் பொன்னப்பா கொடுத்த வேலையை குறையில்லாம செஞ்சிருக்காங்க.

 

கிறிஸ்துவ பாதிரியராக நடிச்ச ராதாரவி, கான்ஸ்டபிளாக நடிச்ச பாலாஜி சக்திவேல் ரெண்டு பேரும் அவங்களோட எக்ஸ்பேர்ட்டான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்காங்க.

 

ஜெகம் காமெடி நடிகரா இல்லாம குணச்சிர நடிகரா நடிக்க முயற்சி செஞ்சிருக்கார்.

 

ஜெசந்தர் பின்னம்னேனி ஒளிப்பதிவு கதைக்கேற்ப பயணிக்குது.

 

சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் விதத்தில் அமைச்சிருக்கு. 

 

எதிர்பாராமல் நடக்கும் விபத்தை மையமா வச்சு பல கதாபாத்திரங்களை சேர்த்து இயக்கிய பாலாஜி மாதவன் பாராட்டப்பட வேண்டியவர். 

 

படத்தில் இடியும் இருக்குது, மின்னலும் இருக்குது, காதலும் இருக்குது.

 

மொத்தத்தில், இந்த படம் அனைவரும் பார்த்து பாராட்டும் அளவுக்கு இருக்குது.