நடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

நடிகர்  விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை!
நடிகர் விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

நடிகர்  விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப்படம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பே வெளியாக இருந்தது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று (நவம்பர் 27) வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், இன்றும் படம் ரிலீஸ் ஆகவில்லை.

மீடியா டைம்ஸ்
இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமையை மீடியா டைம்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை, மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார்.

ஆனால், ஒப்பந்தத்தின் போது உறுதி அளித்ததை போல 2018 ஆம் ஆண்டுக்குள் படத்தை, தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்நிலையில், 'கன்னி ராசி ' திரைப்படம் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு எதிராக மீடியா டைம்ஸ் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான வினியோக உரிமைக்காக, தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாக படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக, டிசம்பர் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு அவர் உத்தரவிட்டார். இதனால் இன்று வெளியாவதாக இருந்த கன்னிராசி படம் வெளியாகவில்லை.