‛அண்ணாத்த‘ ரஜினியின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால், அண்ணாத்த தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது.

ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து கொடுப்பது எனது கடமை. இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு எஞ்சியுள்ளது என கூறினார்.

ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் இறங்கிவிட்டால் படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது. தற்போது ரஜினியின் கைவசம் அண்ணாத்த படம் மட்டுமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.