கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘திருமணங்கள் உருவாகும் கதை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது
திருமணங்களையும், திருமண கொண்டாடத்தையும் பார்வையாளர்கள் முன்னால் விருந்தாக படைக்கிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘திருமணங்கள் உருவாகும் கதை’. ஞாயிறு தோறும் மாலை 5:30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
திருமண ஏற்பாடுகளின் வழிமுறைகளை மிக எளிமையாக திருமண பட்ஜெட்டில் ஆரம்பித்து, மண்டபம், மண்டப அலங்காரம், புடவைகள், நகைகள்,கேட்டரிங் வரைக்கும் அனைத்து விஷயங்களையும் தனித்தன்மையோடு வழங்குவதுதான் நிகழ்ச்சியின் சிறப்பு.
வைஷாலி தணிகா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வண்ணம் வழங்கப்படுகிறது.திருமணத்தை கொண்டாட விரும்புவோர்கள் நிச்சயம் ‘திருமணங்கள் உருவாகும் கதை’ நிகழ்ச்சியை தவறாமல் காணலாம்.