கொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவும் நல் உள்ளங்கள் !

கொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவும் நல் உள்ளங்கள் !

கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி சிவா, 

கார்த்தி சிவக்குமார் ,

சிவகார்த்திகேயன்,

நட்டி நட்ராஜ் ,

வேல்ராஜ்.... என நீளும் பட்டியல் !!

கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் மத்திய , மாநில அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் , நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டு., 65 ஆண்டு பாரம்பரியமும் 200 உறுப்பினர்களையும் கொண்ட நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ., இக்கட்டான இச்சூழலில், எதுவும் செய்ய இயலாத சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி வேண்டி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது !

அதற்கு உடனடியாக கடையேழு வள்ளல்களின் மறு உருவமாக திகழும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் , போர்க்கால அடிப்படையில் உடனடியாக செவிமடுத்து ., 50 அரிசி ( 50 x 25 kg) மூட்டைகளை வாரி வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து வளரும் நடிகர்கள் என்றாலும் வளர்ந்த நடிகர்களையே மிஞ்சும் வள்ளல் நடிகர்களாக திகழும் கார்த்தி சிவக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தலா 50,000/-( ஐம்பதாயிரம்) ரூபாய் வழங்கிட, அவர்களைத் தொடர்ந்து , நடிகரும், பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி @ நடராஜ் ரூ10,000/- (பத்தாயிரம்), பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ரூ10,000/- ( பத்தாயிரம்) நமது சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும்.,விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் 'தமிழரசன் ' படத்தினை தயாரித்து வரும் எஸ் என் எஸ் மூவிஸ் (ஸ்ரீ நந்திமேடு செல்லியம்மன் மூவிஸ்) பட அதிபரும் , பெப்சி அமைப்பின் முன்னாள் செயலாளருமான பெப்சி சிவா அவர்கள் ரூ 1,37,000 /- (ஒரு லட்சத்து முப்பத்தேழாயிரம்) மதிப்புடைய அத்தியாவசிய மளிகை பொருட்களை சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு சிறப்பாக வழங்கியுள்ளார். 

இவர்களைப் போன்றே 'யமுனா ' படத்தைத் அடுத்து தற்போது 'கட்டில்' படத்தை இயக்கி, நடிகை சிருஷ்டி டாங்கேவுடன் இணைந்து அதில் கதாநாயகராகவும் நடித்து வரும் கணேஷ்பாபு., நம் சங்க உறுப்பினர்களுக்கு வழங்க ரூ 20,000/- (இருபதாயிரம்) மதிப்பிலான 150 kg (150x1Kg) சன் ஃபிளவர் சமையல் ஆயில் வழங்கியுள்ளார்.

இவர்களைப் போன்றே இன்னும் சில பல சினிமா பிரபலங்களும் நம் சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிட முன்வந்தபடியுள்ளனர். அவர்களுக்கும், இதுவரை உதவிய மேற்கண்டவர்களுக்கும் ஒருசேர சினிமா பத்திரிகையாளர்களின் சார்பில் சினிமா பத்திரிகையாளர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது !