காதலில் விழுந்த லட்சுமி மேனன் - விரைவில் திருமணமா

காதலில் விழுந்த லட்சுமி மேனன் - விரைவில் திருமணமா
காதலில் விழுந்த லட்சுமி மேனன் - விரைவில் திருமணமா?

லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம்?


தமிழில் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய் பாத்திரம் கழுவவும், கழிவறையை சுத்தம் செய்யவும் விரும்பவில்லை என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு உள்ளானார். ரசிகர் ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். யாரையாவது திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை ஆரம்பியுங்கள். சினிமாவை விட்டு விலகிவிடுங்கள் என்று பதிவிட்டு இருந்தது பரபரப்பானது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் லட்சுமி மேனன் கலந்துரையாடியபோது ரசிகர் ஒருவர் நீங்கள் காதலிக்காமல் தனியாகவாக இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன், நான் தனியாக இல்லை என்றார். இதையடுத்து அவர் காதலில் விழுந்து இருப்பதாகவும், தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்? என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.