சிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா!

சிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா!
சிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா!
சிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 103ஆம் ஆண்டுவிழா சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக கோலகலமாக நடந்தது. காவியத்தலைவனின் காலத்தை வென்றவன் நீ - பாகம் 2 என்ற ஆடல், பாடல், கலை நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழக கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் ஐம்பது பேர் பாராட்டு பட்டயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அதில் ஏழு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  இவ்விழாவில் புதியதலைமுறையின் வார மற்றும் மாத இதழ்களான கல்வி மற்றும் பெண் புத்தகத்தை சிங்கப்பூர் கலைஞர்கள் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

19.01.2020ம் தேதி நடைபெற்ற விழாவை எம்.ஜி.ஆர் ஈவண்ட் புரோமட்டர்ஸ் மற்றும் அன்னை சத்தியா மூவி சௌத் இந்தியா இணைந்து நடத்தினார்கள். இதில் மக்கள் தொடர்பு செல்வரகு கௌரவிக்கப்பட்டார்.