சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ரோஜா நகரி தொகுதியில் கிருமிநாசினி தெளித்தார்
நகரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட மாலை பகுதியில் நேற்று கொரோனா அறிகுறி ஒருவருக்கு தென்பட்டது. இதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக அங்கு சென்றார். நகராட்சியில் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்க முடிவெடுத்தனர். அந்த பணியில் ஈடுபட தயக்கம் காட்டிய பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கான உடை அணிந்து கிருமி நாசினியை தெளிக்க ஆரம்பித்தார் சட்ட மன்ற உறுப்பினரான திருமதி.ரோஜா. அதன்பிறகு அவருடன் சேர்ந்து பணியாளர்களும் ஊர் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.