மெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்

கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜாவின் பாடல்கள் மூலமாக உதவி வருகிறார். இந்த நிலையில் , ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது, அதில் நாயகி சுவாதி திரிபாதி கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்கிறார்.

இந்நிலையில், சுவாதியை நாயகன் ரங்கராஜ் காதலித்து திருமணம் செய்துகொள்ள அசைப்படுகிறார், நாயகி சுவாதியும் நாயகன் ரங்கராஜை காதலிக்க துவங்குகிறார், இந்நிலையில் இவர்கள் காதலுக்கு வில்லனாக வருகிறார் நாயகன் ரங்கராஜின் தந்தை மாரிமுத்து, தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்து இவர்களது காதலுக்கு தடையாக நிற்கிறார். இதே போல் நாயகியின் தந்தையும் மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் தான் தன் மகளை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக கதாநாயகனிடம் கூறுகிறார்.

கடைசியில், காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? நாயகியின் தந்தை வைக்கும் மரண விளையாட்டில் நாயகன் வெற்றிபெற்றாரா? அவர்கள் வாழ்க்கை திருமணத்தில் முடிந்ததா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தான் ஒரு புதுமுக நாயகன் என்று தெரியாத அளவுக்கு தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார், நாயகி சுவாதி திரிபாதி சிறப்பாக நடித்துள்ளார், படத்தில் வரும் அனைத்து கதாபத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒரு காதல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் புகுத்தியுள்ளார் இயக்குனர் சரவண ராஜேந்திரன், பாராடுக்கள்!.. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலமாக அமைத்துள்ளது.