12-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'மைண்ட் பாடி சோல்' இசை நிகழச்சி

பாடகரும்-நடிகருமான எம் ஜே ஸ்ரீராம் கடந்த 35 ஆண்டுகளாக 5,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மேலும், கடந்த 12 ஆண்டுகளாக ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தி ரெசிடென்சியில் உள்ள பிளாக் அண்ட் ஒயிட் ரெஸ்டோ பாரில் 'மைண்ட் பாடி சோல்' என்ற தலைப்பில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி ஜூன் 24-ஆம் தேதியோடு 600 வாரங்களை நிறைவு செய்துள்ளது, இதனை தொடர்ந்து 601-வது எபிசோட் ஜூலை 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து பேசிய ஸ்ரீராம், 12 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 10, 2009 அன்று தி ரெசிடென்சியின் பொது மேலாளருடன் ஒரு சாதாரண சந்திப்பின் போது உருவாகியது தான் இந்த 'மைண்ட் பாடி சோல்' என்று கூறினார்.

"ரெஸ்டோ பாரில் ஒரு தமிழ் கச்சேரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் ஆரம்பத்தில் தயங்கினாலும், அந்த யோசனையுடன் முன்னேற ஒப்புக் கொண்டார். அடுத்த வாரத்திலேயே நாங்கள் கச்சேரியை தொடங்கினோம். ஏற்கனவே புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நான் வழக்கமாக வார இறுதி நாட்களில் பிஸியாக இருப்பதால், எங்கள் கச்சேரிக்கு வியாழக்கிழமையை தேர்வு செய்தோம். அப்போதிலிருந்து, ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் 12 மணி வரை எங்கள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது," என்று அவர் கூறினார்.

ஊரடங்கு காலத்தில் கூட நாங்கள் பேஸ்புக்கில் கச்சேரியை தொடர்ந்து நடத்தினோம், 601-வது வார நிகழ்வும் பேஸ்புக்கில் நடைபெறும் என்று ஸ்ரீதர் கூறினார்.

வருகின்ற செப்டம்பர் 17-ஆம் தேதியோடு இந்த கச்சேரி 12 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறது என்று ஸ்ரீராம் உற்சாகமாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: 'மைண்ட் பாடி சோல்' சென்னையில் தொடங்கிய முதல் முழு தமிழ் ரெட்ரோ இசை கச்சேரி. இந்த இசை நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், இதில் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி. ஆகியோரின் பாடல்கள் மட்டுமே பாடப்படும். 'இது ஓரு பொன்மாலை பொழுது' பாடலுடன் தொடங்கி பார்வையாளர்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்தடுத்து பாடல்கள் பாடப்படும். எங்கள் நிகழ்ச்சியில் பல பிரபலங்கல் பார்வையாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மைல்கல் வாரத்திலும், எஸ்.பி.பியை அழைப்பது எங்கள் வழக்கம், இளையராஜாவின் குழுவில் அங்கம் வகித்த இசைக் கலைஞர்களையும் கௌரவம் செய்வோம், என்று ஸ்ரீராம் மேலும் கூறினார்.

"மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, கங்கை அமரன், வித்யாசாகர் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கச்சேரியின் மைல்கல் வாரங்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர். கங்கை அமரன், எஸ்.பி.பி சரண் மற்றும் ரமேஷ் விநாயகம் 600-வது வாரத்திற்கு முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்" என்று அவர் கூறினார்.

700-வது அல்லது 750-வது வாரத்தில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு சிற்பித்தால் இந்த நிகழ்ச்சி முழுமை பெறும் என்று ரசிகர்கள் விரும்புவதாக அவர் கூறினார்.

இந்த ரெட்ரோ நைட்டை எஸ்பிபி மிகவும் விரும்பியதாகவும் அடிக்கடி பாரட்டியதாகவும் ஸ்ரீராம் கூறினார்.

"நான் எப்போதும் அவரை என் குருவாக பார்க்கிறேன். அவரின் வழியில் என்றும் பயணிப்பேன்" என்று ஸ்ரீராம் கூறினார்.

"இதனை ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து அளித்த ஆதரவுக்கு எனது ஒலி பொறியாளர் சேகர், இணை பாடகர் அகிலா மற்றும் ஹோட்டல் நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 12 ஆண்டுகளாக எங்களுக்கு அளவற்ற அன்பை வழங்கிய பார்வையாளர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன், " என்று அவர் கூறினார்.