பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் "நாகா". நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார்.

பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் "நாகா". நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார்.
பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும்

பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் தயாராகும் "நாகா".
நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார்.

'அடிதடி', 'மகா நடிகன்', 'ஜன்னல் ஓரம்', ' குஸ்தி', 'பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன் , எம்.எஸ்.மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் "நாகா".

ஏற்கனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும்
'கருட பஞ்சமி' படத்தை தயாரித்து வருகிறார். இரண்டாவது படைப்பாக "நாகா" படத்தை தயாரிக்கிறார்.
 
இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். பிரபல நடிகையான இவர், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கினார். இப்பொழுது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். இதை முடித்து கொண்டு வந்த பின் இப் படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதே போல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெய்சா வில்சனும் இன்னொரு கதா பாத்திரத்தில் நடிக்கிறார்.

தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார். யாரும் யாருக்கும் ஜோடி இல்லை.
மேலும், கருணாகரன், அறிமுகம் விஜய் நெல்லிஸ், மும்பை நடிகர் ரிகின் சாய்கல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

புராணங்களில் சொல்லப் படுகிற நாகலோகம் இந்த காலத்திலேயும் உண்மையாக இருக்க தான் செய்கிறது என்பதை கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சியுடன் பிரமாண்டமாக சொல்ல வருகிறார் டைரக்டர் சார்லஸ். இவர் 'நஞ்சுபுரம்', 'அழகு குட்டி செல்லம்' போன்ற வித்தியாசமான படங்களை டைரக்ட் செய்துள்ளது குறிப்பிட தக்கது. கிராபிக்ஸ் காட்சிக்காக மட்டும் 3 கோடி செலவு செய்யப் படுகிறது.

'கடல் ஆழத்திலிருந்து வெளியே வரும் ஐந்து தலை ராட்சத நாகம்', 'உடலில் அணிகலன்களாகப் பாம்புகளையே அணிந்த மானஸாதேவி என்கிற நாக அம்மனின் மலைக்க வைக்கும் தோற்றம்' என்று சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கத்தக்க பிரம்மாண்டமான விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் உருவாகும் படம் "நாகா".

தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோவில்கள் மற்றும் நாகநாத சுவாமி கோவில்களின் ஸ்தல புராணங்கள் எல்லாம் "நாகங்களின் ராஜா, தன் இனத்தைக் காக்கும்படி சிவனை வழிபட்ட இடம்" என்றே குறிப்பிடுகின்றன. அதுவே இந்தக் கதைக்கான தொடக்கப் புள்ளி. நம் பலருக்குமேகூட தமிழகத்தில் 'நாக நாடு' என்று ஓர் நாடு இருந்தது தெரியாது. நாகப்பட்டிணம், நாகூர் பகுதிகளை உள்ளடக்கிய கடற்கரையோர பகுதியில் தொன்மையான நாகநாடு இருந்தது. அவற்றுக்கும் நாகராஜா கோயில்களுக்கும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாகலோகத்துக்குமான தொடர்பை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்தக் கதை, தற்கால சமூகப் பிரச்சனை ஒன்றையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

நீதித் துறையால் நெருங்கக்கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, அநீதியின் மொத்த  உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து வந்து சங்காரம் செய்து அழித்து ஒழிப்பதே "நாகா" படத்தின் ஒன்லைன்.

இதன் பூஜை, இன்று ( ஏப்ரல் 16 ) நடந்தது. இதில், படத்தில் இடம் பெறும் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 27ம் தேதி முதல் பாண்டிசேரியில் படபிப்பு ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து, ஹம்பி, கேரளா கடற்கரையோரம் என தொடர்ந்து 55 நாட்கள் படபிடிப்பு நடை பெறுகிறது.

இசை: விஷால் சந்திரசேகர் ( ஜில் ஜங் ஜக், உரியடி, குற்றம்23, ரங்கூன், ஜாக்பாட், ஓ மனபெண்ணே புகழ் )

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.சதிஷ்குமார் ( பேரான்மை, மீகாமான், பூலோகம் புகழ் )