நியூஸ் 7 தமிழின் “க்ரைம் டைரி” நிகழ்ச்சி

 நியூஸ் 7 தமிழின் “க்ரைம் டைரி” நிகழ்ச்சி

பதைபதைப்பூட்டும் சம்பவங்கள், படிப்பினையூட்டும் பின்னணிகள், அதிர்ச்சியூட்டக் கூடிய பழிவாங்கல் என சிலிர்ப்பூட்டும் குற்றச் செய்திகளை தெரிவு செய்து விழிப்புணர்வுடன் ஒளிபரப்புகிறது நியூஸ் 7 தமிழின் “க்ரைம் டைரி”.

தற்கொலை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்த செய்திகள் ஒளிபரப்பாகும் போது, அந்தக் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை ஒளிபரப்புவது க்ரைம் டைரியின் சிறப்பம்சமாகும்.

தினமும் காலை 7:30 மணிக்கும் மற்றும் இரவு 8:30 மணிக்கும் க்ரைம் டைரி ஒளிபரப்பாகிறது. க்ரைம் தலைமைச் செய்தியாளர் ந.பா. சேதுராமன் மற்றும் செய்தியாளர்கள் குழு க்ரைம் டைரியை தயாரித்து வழங்க, குதுப்தீன் மற்றும் பாலாஜி தொகுத்து வழங்குகின்றனர்.