இயக்குனர் பா. இரஞ்சித் தயாரித்து இயக்கிய "மகிழ்ச்சி " பாடல்

இயக்குனர் பா. இரஞ்சித்  தயாரித்து  இயக்கிய "மகிழ்ச்சி " பாடல் .

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய "பரியேறும் பெருமாள் " படத்தை தயாரித்ததோடு அடுத்து  தனது தயாரிப்பில் "குண்டு" படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில்  தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார் . நடன இயக்குனர்  சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார் . மூன்று  நாட்கள்  நடைபெற்ற  இந்த  படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு  செலவாகும் பொருட்ச்செலவில்  படமாக்கப்பட்டுள்ளது , மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன் ,லிங்கேஷ் , ஹரி , சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர் . 

மகிழ்ச்சி  ஆல்பத்தில் மொத்தம் எட்டு  பாடல்கள் வெளியாகியிருக்கிறது.