பெப்பர்ஸ் டிவியில் "இன்று ஒரு கதை" நிகழ்ச்சி
பெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:50 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘இன்று ஒரு கதை’.
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும், ஆசிரியருமான திருமதி . கற்பகவல்லி என்பவர் தான் இந்த கதைகளை சொல்கிறார் .இந்த ‘இன்று ஒரு கதையின் சிறப்பம்சமே சரித்திரத்தில் இருந்து ஒரு கதையை எடுத்து அது இன்றைய சூழலில் எப்படி பொருந்திப்போகிறது என்பதை அழகாக விளக்குகிறார். இது சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தக்கூடிய நிகழ்ச்சி தான். இவருடையை இந்த கதை பள்ளி மாணவர்களுக்கும் அறிவுரையாக இருக்கிறது .இதுவரை ஒருமுறை சொன்ன கதையை மறுமுறை சொல்லாமல் இன்றுவரை சுமார் 800 கதைகளை சொல்லியிருக்கிறார் திருமதி. கற்பகவல்லி. இவருடைய நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே குறிப்பிட்ட அளவில் பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .