சைக்கோ திரை விமர்சனம்

சைக்கோ திரை விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர்‌ நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சைக்கோ. டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார்.

கோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என தெரியவந்தது. 

கொலையாளியை போலீசார் தேடி வரும் நிலையில், நாயகி அதிதி ராவ் அதே பாணியில் கடத்தப்படுகிறார். 

இறுதியில் சைக்கோ கொலையாளியிடம் இருந்து அதிதி ராவை உதயநிதி உயிருடன் மீட்டாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக பெண்களை கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

உதயநிதி  எப்படி  நடிதிருக்கிறார் என்று  சொல்ல  முடியாது . கண்  பார்வையற்றவர் என்பதால்   படம்  முழுதுமே  கூலிங்   க்ளாசையே  அணிந்திருக்கிறார் .உடல் மொழியால்  மட்டும்  தன்  திறமையை   வளர்த்து  கொள்ள  இந்த  படம்  அவருக்கு பேருதவி  புரிந்திருக்கும் .

படத்திற்கு பலம் இளையராஜாவின் இசை. பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதுபோல் தன்வீர் மிரின் ஒளிப்பதிவும் அருமை.