புதிய தலைமுறை தொலைக்காட்சி 2020ஆம் ஆண்டுக்கான சக்தி விருதுகள் 2020

புதிய தலைமுறை தொலைக்காட்சி 2020ஆம் ஆண்டுக்கான சக்தி விருதுகள் 2020
புதிய தலைமுறை தொலைக்காட்சி 2020ஆம் ஆண்டுக்கான சக்தி விருதுகள் 2020

புதிய தலைமுறை தொலைக்காட்சி 2020ஆம் ஆண்டுக்கான மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக சாதனைப் பெண்களுக்கு சக்தி விருது வழங்கி சிறப்பிக்கவுள்ளது. துணிவு, புலமை, திறமை, தலைமை, கருணை,மற்றும் சாதனை என ஆறு வெவ்வேறு துறைகளில் சாதித்த பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சக்தி  விருதுகள் வழங்கப்படவுள்ளது. இவ்விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 26, புதன்கிழமையன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மதிப்பிற்குரிய பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களும், கலையுலகைச் சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் தொகுப்பு மார்ச் எட்டாம் தேதி, மகளிர் தினத்தன்று ஒளிரப்பாகும்.