நமது புதிய தலைமுறையில் “கிச்சன் கேபினட்”நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது

நமது புதிய தலைமுறையில் “கிச்சன் கேபினட்”நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது
நமது புதிய தலைமுறையில் “கிச்சன் கேபினட்”நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது

அன்றாட நிகழ்வுகளையும் செய்திகளையும் நையாண்டி கலந்து வழங்கிக் கொண்டிருக்கும் “கிச்சன் கேபினட்” நிகழ்ச்சி மக்களின் ஆதரவுடன் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அன்றாடச் செய்திகளின் சாரத்தை பாடலாக எழுதி இசையமைத்து வழங்குவதோடு தொடங்கும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் பல்வேறு சுவையான பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அரசியல் நிகழ்வுகளை அங்கத மொழியில் அலசிக்காயப் போடும் இடிதாங்கி என்ற பாத்திரம் இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்டுகிறது.  அரசியல் நிகழ்வுகளை திரைப்படம் போல சித்தரித்து அதை காட்சியாக்குவதைப் பார்வையாளர்கள் பார்க்க மறுப்பதில்லை. இப்படி சின்ன சின்ன தொகுப்புகளாக  சிறப்பு சேர்க்கும்  கிச்சன் கேபினட் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு10:30 மணிக்கு நமது புதிய தலைமுறையில் ஒளிப்பரப்பாகிறது.