புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சி
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘நேர்படப்பேசு’ நிகழ்ச்சி

தமிழக செய்தித் தொலைக்காட்சிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல், புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் வலிமையான கரம் இந்த ‘நேர்படப்பேசு’ விவாத நிகழ்ச்சி. தமிழக தொலைக்காட்சிகள் ’விவாதம்’ – என்றாலேயே ஒரு விருந்தினரை மட்டும் அழைத்து, அவரது கருத்துகளை மட்டுமே வெளியிட்ட நேரத்தில், எதிர் எதிர் சார்புகளை உடைய 4 அல்லது அதற்கு மேற்பட்ட விருந்தினர்களை அழைத்து, ஒரே நேரத்தில் விவாதிக்க மேடை அமைத்துக் கொடுத்த முதல் நேரலை நிகழ்ச்சி இதுதான்.

இந்த நிகழ்ச்சியின் விவாதத் தலைப்புகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாகவும் சமூகத்திற்குப் பயன்படுபவையாகவும் உள்ளன. அன்றைக்கு மக்கள் மனதில் சமூகம் சார்ந்து என்ன கேள்வி எழுகின்றதோ அதுவே தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. மக்கள் தலைவரின் நிலைப்பாட்டை அறியவும், தலைவர்கள் மக்களின் நிலையை அறியவும் இந்த விவாதங்கள் பாலமாகச் செயல்படுகின்றன.

அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், துறைசார் வல்லுநர்கள், அரசியல் பார்வையாளர்கள், திரைப் பிரபலங்கள் – விருந்தினராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றக் கூடியது.

இந்த நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் மற்றும் தம்பி தமிழரசன் ,கார்த்திகேயன் ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.இந்நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு புதியதலைமுறையில் ஒளிபரப்பாகிறது .