புதியதலைமுறை தொலைக்காட்சியில் கிச்சன் கேபினட் – “படம் எப்படியிருக்கு” நிகழ்ச்சி

புதியதலைமுறை தொலைக்காட்சியில்  கிச்சன் கேபினட் – “படம் எப்படியிருக்கு” நிகழ்ச்சி

அன்றாட செய்திகள் பல்லவி சரணம் என்று பாட்டாக தொடங்கும் கிச்சன் கேபினட்டில்  அரசியல் நிகழ்வுகளை ஒரு சினிமா விமர்னம் போல தொகுத்து வழங்குவதைப்போல ‘படம் எப்படியிருக்கு’ என்ற பகுதி வருகிறது.  அன்றாட அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு வரும் இந்த பகுதியே ஒரு திரைப்படம் போல அமைகிறது.  திரைப்படத்திற்கான பெயர், இயக்குநர் என்று தொடங்கும் இந்த பகுதியில் கதாபாத்திரங்களாக சித்திரிக்கபடும் நாயகர்களுக்கு ஏற்ற உரையாடல்களுக்கு ஏற்ற நையாண்டியான பதில்களை அளிப்பது இந்த பகுதிக்கு கூடுதல் சுவையூட்டுகிறது. இத்தோடு இடிதாங்கி, அரசியல் கிசுகிசு என்று சுவையான பகுதிகளுடன் வரும் இந்த நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.