3 மாஸ் இயக்குனர்களுடன் இணையும் ரஜினிகாந்த்

3 மாஸ் இயக்குனர்களுடன் இணையும் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான "பேட்ட" திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது, இந்நிலையில் அவர் 3 மாஸ் இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிக்கஉள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஜனரஞ்சகமான திரைப்படத்தில் நடிக்க உள்ளார், பின்பு மீண்டும் "பேட்ட" இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது, மேலும் பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகை கலக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாகவும், அதன் பின்னே அவர் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் கூறுகிறது.