சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "உரிமை குரல்" நிகழ்ச்சி

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "உரிமை குரல்" நிகழ்ச்சி

மக்களின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுத்து வரும் சத்தியம் தொலைக்காட்சியின் மற்றொரு படைப்பு உரிமைக்குரல். ஒரு வாரத்தில் நடந்த மக்களின் உரிமைக்கான அத்தனை போராட்டங்களையும் உங்கள் கண் முன் கொண்டு வருவது தான் ”உரிமை குரல்” நிகழ்ச்சி.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல், மாறும் மாற்றங்களுக்கு இடையில் நாமும் வளமான மாற்றகளுக்காக ஓடிக்கொண்டே தான் இருக்கின்றோம்.  புரையோடும் பிரச்சனைகளுக்கு இடையில் மின்னலாய் சீறிப்பாயும் நாட்களை நம் வாழ்வில் அன்றாடம் கடந்து கொண்டேதான் இருக்கிறோம். பல பல சமூக பிரச்சனைகள், சீரழிவுகள், சாதனை கொண்டாட்டங்கள், உண்மைச் சம்பவங்கள், தொடரும் அரசியல் மாற்றங்கள்,கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள், தீர்க்க வழியிருந்தும் கண்டுகொள்ளாமல் விட்ட ஆளூமைகளால் ஏமாற்றம், கோபம், வருத்தம் என, உங்கள் மனதின் குமுறல்களை  உலகிற்கு உரக்க சொல்லும் நிகழ்சிதான் ”உரிமை குரல்” .ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கும் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்சியை ஸ்டெல்லா தொகுத்து வழங்குகிறார்.