"அகோரி" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு!

"அகோரி" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு!
"அகோரி" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியீடு!

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'அகோரி' . இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும்  போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் காமெடி காதல்  சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும். 

சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.