சங்கர் கணேஷ் மகன் " ஸ்ரீ". மாடல் அழகியுடன் கதாநாயகனாக நடிக்கும் " பேராசை".
சங்கர் கணேஷ் மகன் " ஸ்ரீ". மாடல் அழகியுடன்
கதாநாயகனாக நடிக்கும்
" பேராசை".
புது இயக்குனர் அறிமுகம்
"வறுமையை நினைத்து பயந்து விடாதே. திறமை இருக்கு மறந்து விடாதே". என்பதை மறந்து வறுமைக்கு பயந்து "குடி " க்கு ஆளானவன் போதையில் எடுக்கும் முடிவுகளெல்லாம் அவனுக்கு எதிராக எதிர்வினை புரிகின்றன. இதிலிருந்து மீண்டானா? மீளவில்லையா ? என்பதை கதைக்களமாக்கி உருவாகும் படத்தில் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்கிறார். "யாரடி நீ மோகினி " தொலைக்காட்சி தொடரில் மூன்று கதாநாயகிகளுடன் நடித்து வருபவர் தான் இந்த ஸ்ரீ. மேலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் தான் இவர்.
மற்றும் ஒரு கதாயநாயகன் கௌஷிக், இரண்டு படங்கள் நடித்துள்ளார்.
மாடல் அழகிகளான தீஷிகா , வெண்பா இருவருடன் கிரிஜா இணைந்து மூன்று கதாநாயகிகளாக வலம் வருகிறார்கள். பூவிலங்கு மோகன். சிறுத்தை விசித்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தீபாவளியை அடுத்து நாகர்கோவிலிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது
சங்கர் கணேசின் உதவியாளரான வி.ஆர். ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைப்பாளராக இதில் அறிமுகமாகிறார்.
முத்துராஜ் EDITOR,
STILLS விஜய் மணி, DESIGNING சசி & சசி, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும் , செந்தில் கலையையும், ராதிகா நடன பயிற்சியையும், கஜபதி வசனம் மற்றும் இணை இயக்கத்தையும், ஈசன் கதை, திரைக்கதையையும், வணக்கம் ராஜா தயாரிப்பு மேற்பார்வையையும் கவனிக்கின்றனர்.
திருமதி சக்தி அருண் கேசவன் மற்றும் ஷிஹான் சரவணன் இருவரும் ஈசன் மூவீஸ் சார்பில்" பேராசை " படத்தை தயாரிக்கின்றனர். இ.வி.ஆர். முத்துக் குட்டி டைரக்ட் செய்யும் இப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளிவருகிறது.
கிளாமர் சத்யா
PRO