குடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் சிவகுமார்

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் #சிவகுமார் பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் - கடவுள், மதம் சம்பந்தமாக வெளியான சில செய்திகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையில் , வீடியோ செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது.:)  #sivakumar‬

‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். கடவுளுக்கு வடிவம் இல்லை; ஆண், பெண் என்ற பேதம் இல்லை! ‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல’ என்று சொன்னவர் மகாத்மா காந்தி.

ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்’ என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.  நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார்.

நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம்.

அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். ‘யு ட்யூப்’பில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது... ’அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல்’. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.’’ இவ்வாறு கூறியுள்ளார்.

Siva Kumar gives an explanation through a video for the statements passed on the Internet against him and his family on the aspects of God and religion!
“There are millions and millions of people in our country who staunchly believe and pray God with varied names like Lord Shiva, Lord Vishnu, Lord Brahma, Lord Karthikeya, Lord Ganesha, Goddess Lakshmi, Goddess Saraswathi, Goddess Kamatchi, Goddess Meenatchi.

Also, there are people who believe and pray Lord Jesus and Allah! Mahatma Gandhi is the one who had stated that “Am I an atheist? There is neither a form for God nor can be defined with a specific gender! God is someone who has to be felt from within! It’s not about debating.”  But it is mentioned in history that he was the one who was calling out God by stating “Hey Ram!” while he passed away.

Then it indicates that he was praying Lord Rama! I am theist! My father was a staunch believer of Lord Karthikeya! Every Kirthigai, my father used to do fasting and travel to Pazhani hills! He returns only after he completes singing the memorized song of Thirupughazh and prays to God. I am also a devotee of Lord Karthikeya! I am having a photo of Lord Karthikeya and praying to him every day since I was five years old.

Even now, we have pictures of different gods in the Puja room in our house. Ramayana and Mahabharatha are the ones which bring pride to India. I have given the speech along with songs by narrating those grand epics in front of almost 5000 people. You can still watch the narration on YouTube even now.

True devotion is something that is actually called when ‘we express the love to others, treating everyone equally and helping those who are poor or in need.’ Whoever does this properly is the one who can be called a ‘devotee’! Great piety! Every religion speaks such fact predominantly!”