திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி நன்றி

அன்புடையீர் ,
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் அக்டோபர் வரை பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தது. தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி பல்லாயிரம் சினிமா துறை மற்றும் திரையரங்க ஊழியர்களின் குடும்பத்தில் விளக்கேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் , மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
- கலைப்புலி s தாணு (தயாரிப்பாளர் - V CREATIONS )
முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ,
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணை தலைவர்