தலைவி படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர்
தலைவி படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர்
ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி மீண்டும் கங்கனா
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசு அரசியல், போதை மருந்து புழக்கம் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுப்பி பரபரப்பு ஏற்படுத்தியவர் கங்கனா ரணாவத். மராட்டிய அரசையும் விமர்சித்தார். இதனால் மும்பையில் உள்ள அவரது பங்களாவை இடித்தனர். ஆனாலும் பின்வாங்காமல் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் தலைவி படப்பிடிப்பிலும் தற்போது பங்கேற்று இருக்கிறார். படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக நடனம் ஆடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இதில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் சசிகலா வேடத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர். கொரேனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. ஊரடங்கு தளர்வினால் தலைவி படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர்.