வேந்தர் தொலைக்காட்சியில் "பதில் சொல்லு பரிசை வெல்லு" புதிய நிகழ்ச்சி
வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை ஒளிப்பரப்பாகும் புதிய நிகழ்ச்சி "பதில் சொல்லு பரிசை வெல்லு".
இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சினிமா பற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லும் நேயர்களுக்கு ரூ.2000 பரிசளிக்கப்படுகிறது .ஒவ்வொரு வார இறுதியில் ஒரு சினிமா பிரபலம் நிகழ்ச்சிக்கு வந்து வெற்றியாளரை தேர்ந்தெடுப்பார்.. வெற்றி பெறும் நபர்கள் திரை பிரபலங்கள் மூலம் பரிசளிக்கப்படுகிறது .மேலும் நேயர்களை ஊக்குவிப்பதற்காக வேந்தர் டிவி சமூக ஊடக பக்கங்களான பேஸ் புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள பரிசு வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அஞ்சலி.