வேந்தர் டிவியில் "மூன்றாவது கண் "புதிய பார்வையோடு...
வேந்தர் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “மூன்றாவது கண்"புதிய பார்வையோடு அமானுஷ்யங்களைப் பற்றின ஒரு பரப்பரப்பான தேடல்தான் இந்த நிகழ்ச்சி. அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும், இறைவன் கருணையால் நடக்கும் அற்புத நிகழ்வுகளும் ,சித்தர்கள் பற்றிய தேடல்கள் மற்றும் இயற்கைக்கு முரணான நிகழ்வுகளும் மூன்றாவது கண் நிகழ்ச்சி வெளியுலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது .
கடினமான இருள் ,கரடு முரடான மலைப்பாதை என சிரமங்களை எண்ணிடாமல் நேயர்களுக்கு புதிய விஷயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது"மூன்றாவது கண் " அதிசய நிகழ்வுகளை வழங்கி கொண்டிருக்கிறது .