கமல்ஹாசன் மகள்களை நடிகை ஆக்கியது ஏன்

மகள்களை நடிகை ஆக்கியது ஏன்? கமல்ஹாசன் பதில்
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கிறார். இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். பிறகு அவரும் நடிக்க வந்தார். தமிழ், இந்தி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஒருவர், கமலிடம் மகள்களை நடிக்க அனுப்பியது ஏன் என கேள்வி கேட்டிருக்கிறார். அது பற்றி ஸ்ருதிஹாசன் கூறியது:
மகள்களை எப்படி சினிமாவில் நடிக்க அனுமதித்தீர்கள் என ஒருவர் அப்பாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, ‘உங்க மகளுக்கு அரேஞ்ட் மேரேஜ் செய்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்திருக்கிறீர்கள். ஆனால் என் மகளை நான் வளர்ந்த வீட்டுக்கு (திரையுலகிற்கு) அனுப்பி வைத்திருக்கிறேன். இது என் வீடு. தெரிந்தே அனுப்பினேன். வலிமையாக இருக்க கற்றுக் கொடுத்திருக்கிறேன்’’ என்றார். இதுதான் உண்மை. சினிமாவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எங்களுக்கு புரிய வைத்த பிறகே இங்கு அப்பா அனுப்பியுள்ளார். அவரது மகள்களாக அவருக்கு நல்ல பெயரையே நானும் அக்ஷராவும் பெற்றுத் தருவோம். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.