வின் நியூஸ் தொலைக்காட்சியில் “அறியாத அதிசயங்கள்” நிகழ்ச்சி

வின் நியூஸ் தொலைக்காட்சியில்  “அறியாத அதிசயங்கள்” நிகழ்ச்சி

வின் நியூஸ் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு உலகில் உள்ள அதிசயங்களின் தொகுப்பாக வரும் நிகழ்ச்சி “அறியாத அதிசயங்கள்”

உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள வியப்பை ஏற்படுத்தும் உண்மை தகவல்களும், அவ்விடங்களின் அற்புத காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது. இயற்கையாகவே அமைந்த ஆச்சரியமிக்க பகுதிகளையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு சிறப்பான  இடங்களையும், இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம். குறிப்பாக, இதுவரை பலரும் அறியாத இடங்களை தேர்ந்தெடுத்து அந்த இடங்களைப் பற்றிய, அபூர்வமான செய்திகளை விரிவாக பதிவு செய்கின்றனர். அரை மணி நேரத்தில் உலகின் மூலை முடுக்குகளில் மறைந்து கிடக்கும் அதிசயங்களை கண்முன் கொண்டு வருகிறது இந்த அறியாத அதிசயங்கள் நிகழ்ச்சி. செய்தி ஆசிரியர் நா. அனந்த பத்மநாபன் எழுத்தாக்கத்திலான இந்த நிகழ்ச்சியை ஜனனி தொகுத்து வழங்குகிறார்