ரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்

Lyca Productions Subaskaran presents ‘DARBAR’
CAST: Superstar Rajinikanth ,Nayanthara, Nivetha Thomas, Suniel Shetty ,Yogi Babu, Thambi Ramaiah, Sriman , Prateik Babbar, Jatin Sarna , Nawab Shah, Dalip Tahil
CREW:
Written & Directed by AR Murugadoss
Banner: Lyca Productions
Music: Anirudh Ravichander
Cinematographer: Santosh Sivan ASC. ISC
Editor: A. Sreekar Prasad
Art Direction: T Santhanam
Stunts Choreography: Peter Hein, Ram-Laxman Chella
Dance Choreography: Brinda, Raju Sundaram & Shobi
Lyricist: Vivek
Executive Producer: Sundarraj
Sound Mixing: Suren.G & Alagiakoothan.S
Costume Designers: Niharika Khan, Anu Vardhan
Stills: Sitrarasu
Publicity Designs: Vinci Raj & Kabilan
DI: Prime Focus
VFX: NXGEN Media
Digital Partner: Divo
Music On: Rubax
PRO: Riaz K.Ahmed & Diamond Babu
Streaming Partner: Gaana
மும்பை நகரத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் தாதாக்கள் சாம்ராஜ்யத்தை தீர்க்க மும்பையில் காவல் ஆணையராக பொறுபேற்ற ஆதித்யா அருணாச்சலத்தை (ரஜினி) டெல்லி உத்தரவின் பேரில் அனுப்பப்படுகிறார் போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா.
போதை பொருள் சந்தைக்கு நிழலாக இருந்தும் மும்பையை சீரழித்துவரும் அஜய் மல்கோத் ராவை (பிரதிக் பப்பர்) கைது செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கிறார் ஆதித்யா। ஆனால், சிறையில் ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டில் உல்லாசமாக வாழ்கிறார் அஜய்.இதை அறிந்து கொதித்துப் போகும் ஆதித்யா அஜய் மல்கோத்ராவை இந்தியா கொண்டு வர என்ன செய்தார்? அதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? மும்பையை ‘கிளீன் சிட்டி’ ஆக அவர் மாற்றினாரா? இல்லையா என்பதைப் பரபரப் பும் கலகலப்பும் கலந்த திரைக் கதையாக விரித்துச் சொல்கிறது ‘தர்பார்’
இயக்குனர் முருகதாஸ் இதனை முழுக்க முழுக்க ரஜினியின் படமாகாவே அணுகியிருப்பது நன்றாகவே தெரிகிறது அதனால் தான் முருகதாஸ் படத்தின் டேகினிகள் விஷயங்கள் ஏதும் இல்லாமல் போகிறது திரைக்கதை
படத்தின் பலமே ரஜினி, நிவேதா தாமஸ் இடையே பாசக் காட்சிகள் தான்.
ஆதித்யா, லில்லி(நயன்தாரா) இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.ரஜினியும் வயசுக்கு மீறிய எனர்ஜியை காட்டி வியக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளில் படம் முழுவதும் தன்னை கலாய்த்து அப்ளாஸ் அள்ள யோகிபாபுவை அனுமதித்திருக்கிறார் ரஜினி.
அனிருத்தின் கொண்டாட்டமான இசையும் சந் தோஷ் சிவனின் இளமை துள்ளும் ஒளிப்பதிவும் ரஜினி தர்பாரை இன்னும் ஜோராக தூக்கிப் பிடித்திருக்கின்றன.