கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘குற்றம் தேடி’நிகழ்ச்சி

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘குற்றம் தேடி’நிகழ்ச்சி

விஞ்ஞானம் வளர்ந்து வந்துள்ள நவீன உலகத்திலும் கூட குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. சொல்லப்போனால் விஞ்ஞானத்தை தனது வளர்ச்சிக்காகவும் குற்றங்கள் பயன்படுத்தி கொண்டது. இப்படிப்பட்ட குற்றங்களையும் அதன் பின்னணியையும் அலசி ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிதான் ‘குற்றம் தேடி’.
 
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.பெண் தொகுப்பாளர் அங்கயற்கண்ணி ‘குற்றம் தேடி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிறப்பு. குற்றங்களில் இருந்து விலகி செல்வதற்கு நிச்சயம் ‘குற்றம் தேடி’ நிகழ்ச்சி உதவியாக இருக்கும்.